Tuesday 24 April 2018

பலாமூஸ் பொடிமாஸ் - சமையல் குறிப்பு


லாமூஸ் பொடிமாஸ் சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 


தேவையான பொருட்கள்:
பலாமூஸ்(பலாக்காய்) - 1/4 கிலோ 
துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் - 1/4 மூடி (துருவி வைத்து கொள்ளவும்)
சின்ன வெங்காயம் - 15 (துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்)
வரமிளகாய் - 3 
கடுகு - 2 டீஸ்பூன்
கடலெண்ணெய் - 4 டீஸ்பூன் 
பெருஞ்சீரக பொடி - 1 1/2 டீஸ்பூன் 
உப்பு -  1 1/2  டீஸ்பூன்

செய்முறை:
முதலில் பலாமூசை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக அரிந்து வைத்து கொள்ளவும். நறுக்கிய பலாமூஸ் துண்டுகளை குக்கரில் வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி நான்கு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். 

வேக வைத்த பலாமூஸ் துண்டுகளை சிப்ஸ் கட்டையில் வைத்து சிறு துணுக்குகளாக சீவி கொள்ளவும். 

சிறு துணுக்குகளாக சீவிய பலாமூஸில் 1 1/2 டீஸ்பூன் உப்பையும், 1 1/2  டீஸ்பூன் பெருஞ்சீரக பொடியையும் தூவி விட்டு நன்கு பிசறி விடவும்.

துவரம்பருப்பை வேக வைத்து அதில் தேங்காய் துருவலை தூவி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் கடலெண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, வரமிளகாய், நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காய 

துண்டுகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும், நன்கு வதங்கியவுடன் அதில் உப்பு, பெருஞ்சீரகபொடி சேர்த்து பிசறி வைத்துள்ள பலாமூஸ் துணுக்குகளை சேர்த்து  வதக்கவும்.  

வதக்கி முடிக்கும்போது வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவலை சேர்க்கவும்.  

நன்கு வதங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும், சுவையான பலாமூஸ் பொடிமாஸ் தயார்.   
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 10 April 2018

வெண்டைக்காய் பொரியல் சமையல் குறிப்பு

 மகளிர் டைம்ஸ்
வெண்டைக்காய் பொரியல் சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 



----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 3 April 2018

உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் எலுமிச்சம்பழ சாதம்


லுமிச்சம்பழ சாதம் சமையல் குறிப்பு - காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்.


தேவையான பொருட்கள்
எலுமிச்சம்பழம் - 3 
கடலைபருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் - 3 
கடுகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை  - 1 ஈர்க்கு 
வெந்தய பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காய பொடி - 1/4 டீஸ்பூன் 
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை
முதலில் எலுமிச்சம்பழங்களை இரண்டு துண்டுகளாக வெட்டி சாறு பிழிந்து ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைத்து கொள்ளவும். (விதைகளை வடிகட்டி விடவும்)

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு, மிளகாய், கடலைபருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும், 

தாளித்த கடுகு, மிளகாய், கடலைபருப்பு, கறிவேப்பிலையுடன் எலுமிச்சை சாறு, வெந்தயபொடி, பெருங்காய பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்தவுடன் எலுமிச்சம்பழ சாறு கெட்டியான பதத்துக்கு வந்துவிடும், அப்போது அடுப்பிலிருந்து எலுமிச்சம்பழ காய்ச்சலை இறக்கி விடவும்.

ஒரு அகலமான தட்டு அல்லது தாம்பாளத்தில் சாதத்தை கொட்டி அதில் எலுமிச்சம்பழ காய்ச்சலை ஊற்றி நன்கு கிளறி விடவும். 

சுவையான எலுமிச்சம்பழ சாதம் தயார். 

----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 28 March 2018

தேங்காய் சட்னி - சமையல் குறிப்பு


தேங்காய் சட்னி - சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 


தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1 மூடி 
பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன் 
வர மிளகாய் - 2 
உப்பு - தேவையான அளவு 
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு 
பெருங்காய பொடி - 1/2 டீஸ்பூன் 

செய்முறை:

முதலில் மிளகாயுடன் பொட்டுகடலை, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். 

மிளகாய், பொட்டுகடலை, உப்பு பொடியுடன் தேங்காய் துருவலை சேர்த்து மிக்சியில் அரைக்கவும். 

ஒரு முறை அரைத்தவுடன் அதில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து தேங்காய் சட்னியை தனியே ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.   

ஆலக்கரண்டியை அடுப்பில் வைத்து அதில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய்  காய்ந்தவுடன் 1 டீஸ்பூன் கடுகு போடவும், கடுகு வெடித்தவுடன் அதில் சிறிது பெருங்காயபொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

தாளித்த கடுகு, கறிவேப்பிலை , பெருங்காயபொடியை  தனியே எடுத்து வைத்துள்ள தேங்காய் சட்னியில் சேர்க்கவும். 

இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள அருமையான தேங்காய் சட்னி தயார். 
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 20 March 2018

வாய்வு தொல்லை போக்கும் பூண்டு சட்னி

                                

வாய்வு தொல்லை போக்கும் பூண்டு சட்னி - சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 



தேவையான பொருட்கள்:
பூண்டு: 12 பற்கள் (உரித்து வைத்து கொள்ளவும்)
தேங்காய் துருவல் - 1 மூடி 
வரமிளகாய் - 2 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் மிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும், 

பின்னர் அதனுடன்  தேங்காய் துருவல் சேர்த்து ( 1/4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்) அரைத்து கொள்ளவும்.

இறுதியில் மிளகாய், தேங்காய் துருவலுடன் பூண்டு பற்களை சேர்த்து அரைக்கவும் -  பூண்டு சட்னி ரெடி.

----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Tuesday 13 March 2018

தோல்விகளால் தோற்கடிக்க முடியாத பெண்


விமான பணிப்பெண் வேலைக்கு 
24 முறை விடாமுயற்சி 
அதில் 22 தோல்விகள் இறுதியில்... 

விமான பணிப்பெண் ஆக வேண்டும், திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் மட்டுமே பார்த்து ரசித்த நாடுகளை விமானத்தில் பறந்து சென்று நேரில் பார்க்க வேண்டும் - இது தான் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேரி க்லேரின் என்ற இளம் பெண்ணின் கனவு, பதினெட்டு வயதில் கல்லூரி படிப்பு முடிந்து பட்டம் பெற்றவுடன் தனது கனவை நனவாக்க பிலிப்பைன்ஸ் நாட்டில் இயங்கி வரும் மிக பிரபலமான சர்வதேச விமான நிறுவனம் ஒன்றில் நேர்முக தேர்வுக்கு சென்றிருக்கிறார், ஆண்டு முதல் கட்ட தேர்விலேயே அவர் வெளியேற்றப்பட்டார். 



முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைப்பது அரிது தொடர்ந்து முயற்சி செய்வோம் என்று தொடர்ந்து பல விமான நிறுவனங்கள் நடத்திய தேர்வுகளுக்கு விண்ணப்பித்து கலந்து கொண்டுள்ளார், ஆனால் வேலை  தான் கிடைக்கவில்லை. பல இடங்களில் முதல்  கட்ட தேர்விலேயே மேரி க்லேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார், ஒவ்வொரு முறை விமான நிறுவனங்களில் தேர்வுக்கு செல்லும்போதும் விமான பணிப்பெண் வேலை எப்படியும் தனக்கு கிடைத்து விடும் என்று மிகவும் நம்பிக்கையோடு செல்வார் மேரி க்லேர். சில முறை தொடர் தோல்விகளுக்கு பிறகு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே தன விமான பணிப்பெண் வேலைக்கான முயற்சிகளை தொடர்ந்து செய்யலாம் என்று நினைத்த மேரி க்லேருக்கு விமான நிறுவனமல்லாத வேறு ஒரு  புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை கிடைக்க அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே விமான நிறுவனங்களில் பணிப்பெண்      வேலைக்கு      தொடர்ந்து        விண்ணப்பங்கள்       அனுப்பி 
தேர்வுகளில் கலந்து கொண்டு வந்துள்ளார். 



தொடர் தோல்விகளால் துவண்டு விடாமல் சில காலம் (மூன்று ஆண்டுகள்) தேர்வுகளில் கலந்து கொள்வதை நிறுத்தி விட்டு விமான பணிப்பெண் வேலைக்கு தன்னை தகுதிபடுத்தி கொள்ள ஒரு பயற்சி கல்லூரியில் சேர்ந்து பயிற்சியும் பெற்றார். 21 வயதில் மீண்டும் விமான பணிப்பெண் வேலைக்கான தேடுதல் வேட்டையை துவங்கினார்.  ஒரு விமான நிறுவனம் நடத்திய தேர்வில் அவர் உடல் எடை அதிகம் என்று கூறி நிராகரித்துள்ளனர், அப்போது அவரது உடல் எடை 54 கிலோ தான் இருந்துள்ளது. இவர் இப்படி தொடர்ந்து விமான பணிப்பெண் வேலைக்கு முயற்சித்து தோல்வி அடைவதை பார்த்த சிலர் இவருக்கு  விமான பணிப்பெண் வேலைக்கு ஏற்ற அழகும் இல்லை, உயரமும் இல்லை என்று இவர் காதுபடவே பேசி கிண்டல் செய்துள்ளனர். தேர்வுகளுக்கு சென்று தோல்வி அடைவது வீட்டிற்க்கு தெரிந்தால் பெற்றோர் கவலைப்படுவார்கள் என்று அவர்களுக்கு சொல்லாமல் தேர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். ஒரு வேளை தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைத்து விட்டால் அந்த வெற்றி செய்தியை மகிழ்ச்சியுடன் வீட்டில் சொல்லி கொள்ளலாம் என்று நினைத்துள்ளார்.  




ஒரு கட்டத்தில் சிலர் சொல்வது போல் தான் விமான பணிப்பெண் வேலைக்கு தகுதியானவள் இல்லையோ என்ற எண்ணம் கூட மேரி க்லேருக்கு வந்துள்ளது, ஆனால் விடாமுயற்சி வெற்றி தரும் என்று தன்னை தானே தேற்றி கொண்டு தொடர்ந்து வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். ஆறு ஆண்டுகள் கடந்து விட்டது, இதுவரை விமான நிறுவனங்களில் பணிப்பெண் வேலைக்கு சேர முயன்றதில் 23 முறை தொடர் தோல்வி தான் பரிசாக கிடைத்துள்ளது, 2016ஆம் ஆண்டு, 24வது முறை, புகழ்பெற்ற சர்வதேச விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் நடந்த இறுதி கட்ட நேர்முக தேர்வில் மேரி க்லேர் விமான பணிப்பெண் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார், இருபது பேர் கலந்து கொண்ட அந்த தேர்வில் இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அதில் மேரி க்லேரும் ஒருவர். 

விடாமுயற்சியாலும், கடும் பயிற்சிகளாலும் தொடர் தோல்விகளை கண்டு தளராமல் தன வாழ்நாள் இலட்சியத்தை அடைந்துள்ள மேரி க்லேர் சொல்வது இதுதான்: தொடர் தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். முயற்சியில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் தான் நம்மை கீழே தள்ளி விடும், ஆகவே, தோல்வி அடைவது குறித்து பயப்படாதீர்கள். நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் கடவுள் சரியான ஒரு  காரணம் வைத்திருப்பார். பல முறை நான் அடைந்த தோல்விகள் தான் என்னை தொடர் பயற்சிகள் மூலம் சிறந்த விமான பணிப்பெண்ணாக தகுதியடைய செய்து ஒரு சர்வதேச விமான நிறுவனத்தில் பணியாற்ற வைத்துள்ளது....  
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Tuesday 6 March 2018

வாய்புண் வயிற்றுப்புண் ஆற்றும் மணத்தக்காளி கீரை சூப்


வாய்புண் வயிற்றுப்புண் ஆற்றும் மணத்தக்காளி கீரை சூப் சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 



தேவையான பொருட்கள்: 
மணத்தக்காளி கீரை (அரிந்தது)- 1 கப் 
தக்காளி - 2 
வரமிளகாய் - 2
தேங்காய்  - 1/2 மூடி தேங்காய் துருவல்
கடலை எண்ணெய் - 3 டீஸ்பூன் 
வெந்தய பொடி - 1 டீஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 15  
கசகசா - 1 டீ ஸ்பூன் 
மிளகு - 1 டீ ஸ்பூன் 
சீரகம் - 1 டீ ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:
கீரையை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பின் ஆய்ந்து வைத்து கொள்ளவும். (1 கப் அளவு)


சின்ன வெங்காயம், தக்காளி இவற்றை துண்டுகளாக அரிந்து வைத்து கொள்ளவும்.


கசகசா, மிளகு, சீரகம் இவற்றுடன் தேங்காய் துருவலை சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று அரைத்துகொள்ளவும்,  பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி,  எண்ணெய் நன்கு காய்ந்தவுடன்  வெந்தயபொடியை சேர்த்து சிவந்தவுடன், வரமிளகாய், அரிந்து வைத்த  சின்ன வெங்காயம் இவற்றை சேர்த்து சிவக்க வதக்கவும். 


சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அரிந்து வைத்த தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்கவும். 


தக்காளி நன்கு வதங்கியவுடன் ஆய்ந்து வைத்துள்ள மணத்தக்காளி கீரையை சேரத்து வதக்கவும். 

கீரை நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள கசகசா, மிளகு, சீரகம், தேங்காய் துருவல் மசாலாவை 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொத்தி வந்தவுடன் இறக்கவும். 
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Wednesday 21 February 2018

கொத்தமல்லி துவையல் - சமையல் குறிப்பு


தேவையான பொருட்கள்: 
கொத்தமல்லி - 1 கட்டு 
வரமிளகாய் - 2
புளி - அரை நெல்லி அளவு (தண்ணீரில் ஊற வைக்கவும்)
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 


கொத்தமல்லி துவையல் - சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள்  மூலம்  மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 



செய்முறை:
கொத்தமல்லி கட்டை தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்திய பின்   இலைகளை ஆய்ந்து வைத்து கொள்ளவும். 

வாணலியில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்த பிறகு அதில் ஆய்ந்து வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும். 


மிக்சியில் வரமிளகாயையும், உப்பையும் சேர்த்து ஒரு சுற்று அரைத்து கொள்ளவும், பின்னர் அதனுடன் தண்ணீரில் ஊற வைத்த புளி, வதக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான கொத்தமல்லி துவையல் தயார்.    


----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Tuesday 13 February 2018

வடக துவையல் - சமையல் குறிப்பு





வடக துவையல் - சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 




--------------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Tuesday 6 February 2018

தக்காளி தொக்கு - சமையல் குறிப்பு

தக்காளி தொக்கு 



தேவையான பொருட்கள்:
தக்காளி – ¼ கிலோ 
பூண்டு – ஒரு முழு பூண்டு (50 கிராம்) தோல் உரித்து எடுத்து கொள்ளவும் 
புளி – ஒரு கோலி குண்டு அளவு
காய்ந்த மிளகாய் – 6
வெள்ளம் – ½ டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – ¼ கப்
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தய பொடி  – ¼ டீ ஸ்பூன்  
தனியா பொடி – ¼ டீ ஸ்பூன்  
பெருங்காய பொடி - ¼ டீ ஸ்பூன்
கல் உப்பு – 2 ஸ்பூன்



செய்முறை: 


தக்காளியை சிறு துண்டுகளாக அரிந்து வைத்து கொள்ளவும்.

அடுப்பில் ஆலகரண்டியை வைத்து சூடானவுடன் வெந்தய பொடி, தனியா பொடி, பெருங்காய பொடி மூன்றையும் ஆலகரண்டியில் போட்டு வறுத்து தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.  

வரமிளகாயை மிக்சியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். அதனுடன் வறுத்து வைத்துள்ள (வெந்தய பொடி, தனியா பொடி, பெருங்காய பொடி) மூன்று பொடிகள் கலவையையும் சேர்த்து மீண்டும் பொடியாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.   

புளி, அரிந்து வைத்த தக்காளி துண்டுகள், உப்பு இவற்றை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். 

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகை போட்டு தாளிக்கவும், கடுகு வெடித்தவுடன் தோல் நீக்கப்பட்ட பூண்டு சேர்த்து பொன் நிறமாக பூண்டு மாறும் வரை வதக்கி கொள்ளவும். 

பூண்டு நன்கு வதங்கியவுடன், மிக்சியில் அரைத்து வைத்துள்ள புளி, தக்காளி கலவையை சேர்த்து ஐந்து நிமிடம் வரை வதக்கி கொள்ளவும், பூண்டு, தக்காளி, புளி நன்கு வதங்கியவுடன் அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகாய், வெந்தய பொடி, தனியா பொடி, பெருங்காய பொடி கலவையையுடன் வெள்ளம் சேரத்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையான தக்காளி தொக்கு தயார். தக்காளி தொக்கை ஆற வைத்து காற்று புகாத ஜாடியில் வைத்து கொள்ளவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Monday 29 January 2018

உளுத்தம்பருப்பு சட்னி - சமையல் குறிப்பு




தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் 

தேங்காய் - அரை மூடி (துருவி வைத்து கொள்ளவும்)

வர மிளகாய் - 2 

நல்லெண்ணெய் - 1 டீ ஸ்பூன் 

புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு

உப்பு - தேவைக்கேற்ப 


செய்முறை:

முதலில் அடுப்பில் ஆலகரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானவுடன்,  இரண்டு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை பொன்முறுவலாக வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.



மிக்சியில் வர மிளகாய், வறுத்து வைத்த உளுத்தம்பருப்பு, புளி, உப்பு போட்டு அரைத்து கொள்ளவும், பின்னர் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து அரை நிமிடம் அரைக்கவும், சிறிது தண்ணீர்  விட்டு மீண்டும் ஒரு முறை அரைத்து எடுத்தால் இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையான உளுத்தம்பருப்பு சட்னி  தயார்.


----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Tuesday 23 January 2018

தக்காளி குருமா - சமையல் குறிப்பு



தேவையான பொருட்கள்:
தக்காளி – 2                                                               
கசகசா – 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – நூறு கிராம்       
பச்சை மிளகாய் – 3
 பட்டை – 4 துண்டு                     
கிராம்பு – 5 துண்டு
தேங்காய் – ½ மூடி தேங்காய் துருவல்   
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
பொட்டுகடலை – 4 டீஸ்பூன்             
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
கடலை எண்ணெய் – 100 கிராம்         
பூண்டு – நான்கு பல்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை 
உப்பு – தேவையான அளவு



செய்முறை: 

முதலில் தக்காளி, வெங்காயத்தை சிறு துண்டுகளாக அரிந்து வைத்து 
கொள்ளவும். 

கசகசா, பெருஞ்சீரகம், பொட்டுகடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். பின்னர் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

வாணலியில்  நான்கு    டீஸ்பூன்    கடலை    எண்ணெய்    விட்டு சூடானவுடன் பட்டை     கிராம்பு    போட்டு    வதக்கவும், நன்கு     வதங்கியவுடன்     அரிந்து வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, மிளகாயை சேர்த்து வதக்கவும்.

பட்டை, கிராம்பு, வெங்காயம், பூண்டு, மிளகாய் நன்கு வதங்கியவுடன் அதனுடன் தக்காளியை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி வெங்காயம் பூண்டு வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய், கசகசா மசாலாவை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.

சுவையான தக்காளி குருமா தயார்.
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Tuesday 16 January 2018

தக்காளி சட்னி - சமையல் குறிப்பு


தேவையான பொருட்கள்:

தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
வர மிளகாய் - 4
வெள்ளை உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
கல் உப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலை எண்ணெய் - 5 டீ ஸ்பூன்


செய்முறை:

தக்காளியை நன்கு கழுவி விட்டு சில நிமிடங்கள் வெண்ணீரில் போட்டு பின்னர் தோலுரித்து எடுத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும். 

வெள்ளை உளுத்தம்பருப்பை இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். 

வறுத்த உளுத்தம்பருப்புடன் வரமிளகாயையும், உப்பையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும் பின்பு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அரைத்து கொள்ளவும், கடைசியாக தக்காளியை சேர்த்து அரைத்து கொள்ளவும். 

வாணலியில் மூன்று டீஸ்பூன்  எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கொள்ளவும், இதில் மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி சட்னியை சேர்த்து சில வினாடிகள் சுட வைத்து எடுக்க சூடான, சுவையான தக்காளி சட்னி தயார். 
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------