Saturday, 18 July 2020

கடலைபருப்பு வெங்காய கறி - மகளிர் டைம்ஸ்


தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு: 50  கிராம்

சின்ன வெங்காயம் - 100  கிராம்

கடலைஎண்ணை - 2 டீஸ்பூன் 

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்

பெருஞ்சீரக பொடி - 1/2 டீஸ்பூன் 

கொத்தமல்லி - சிறிதளவு 

அப்பளம் - 2 

மஞ்சள் தூள் 

மிளகாய் தூள் 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் கடலைப்பருப்பை குக்கரில் வேக வைத்து தனியாக (குழைந்து விடாமல்  - அரை வேக்காடாக) எடுத்து வைத்து கொள்ளவும். 

வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் கடலைஎண்ணை விடவும், கடலைஎண்ணை சூடானவுடன் 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரக பொடியை சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

சின்ன வெங்காயம் சற்று வதங்கியவுடன் எடுத்து வைத்துள்ள மிளகாய் பொடி, மஞ்சள் பொடி & உப்பை வதக்கிய சின்ன வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். வெங்காயம் மிதக்கும் அளவு சிறிது பருப்பு வேக வைத்த தண்ணீர்  விட்டு வெங்காயத்தை சில நிமிடங்கள் வேக விடவும். வெங்காயம் வெந்தவுடன் வேக வைத்த கடலைபருப்பு, தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விட்டு இறக்கி விடவும்.

இரண்டு அப்பளம் எண்ணையில் பொரித்து அதை சூடான வெங்காய கறியில் உடைத்து போட்டால் வெங்காய கறி அதிக சுவையாய் இருக்கும். சுவையான வெங்காய கறி தயார். 

இது சாதம், இட்லி, தோசை போன்ற உணவுகளுடன் தொட்டு கொள்ள சிறந்த சைட் டிஷ் ஆகும்.

----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday, 24 September 2019

வளரும் தொழில்முனைவோர் - Paddu Corner - திருமதி ஸ்டெல்லா மேரி


பெங்களூரிலுள்ள, மார்த்தஹல்லி பகுதியில் மாலை நேரங்களில் சுடச்சுட பணியாரம் சுட்டு தருகிறார்கள் பட்டூ கார்னர் நடத்தி வரும் திருமதி ஸ்டெல்லா மேரி, பிளேசியஸ்  தம்பதியினர், மாலை ஐந்து மணிக்கு துவங்கும் பணியார விற்பனை இரவு பதினோரு மணி வரை நடக்கிறது, இந்த பகுதியில் வாழும் மக்கள் பலருக்கு மாலை நேரத்தில் பட்டூ கார்னரின் சூடான, சுவையான காரப் பணியாரம் மிக சிறந்த ஸ்நாக்ஸ் ஆக இருந்து வருகிறது, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வெங்காயம், காய்கறிகள் அல்லது முட்டை பணியாரம் என்று விதவிதமான சுவைகளில் பணியாரம் செய்து தருகின்றனர்.

பட்டூ கார்னரை நடத்தி வரும் திருமதி ஸ்டெல்லா மேரி அவர்கள் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார், அப்போது எதிர்பாராமல் நடந்த ஒரு சாலை விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மூன்று மாதங்கள் வரை வீட்டில் ஓய்வில் இருக்க நேர்ந்துள்ளது, அப்போது அவர் மனதில் இந்த பணியார விற்பனை செய்யும் திட்டம் உதித்துள்ளது, உடல்நலம் சற்று தேறிய பின்பு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு தன் மனதில் உதித்த பணியார கடை துவங்கும் திட்டத்தை செயல்படுத்தி இன்று ஒரு வளரும் தொழில் முனைவோராக திகழ்கிறார் திருமதி ஸ்டெல்லா மேரி.


தனது கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை என்று நன்றியுடன் அவர் குறிப்பிடுகிறார். வாழ்க்கையில் எதிர்பாராமல் சந்திக்கும் விபத்துகளால் சோர்ந்து போய் விடாமல் தொடர்ந்து போராடி ஒரு தொழில் முனைவோராக வெற்றி பெற்றுள்ள திருமதி ஸ்டெல்லா மேரி அவர்களின் பேட்டியுடன், அவர்களின் பட்டூ கார்னர் கடையின் அறிமுகமும், வாடிக்கையாளர் ஒருவரின் பேட்டியும்  இந்த வாரம் மகளிர் டைம்ஸில்  காணொளி காட்சியாக இடம்பெறுகிறது.

----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday, 24 April 2018

பலாமூஸ் பொடிமாஸ் - சமையல் குறிப்பு


லாமூஸ் பொடிமாஸ் சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 


தேவையான பொருட்கள்:
பலாமூஸ்(பலாக்காய்) - 1/4 கிலோ 
துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் - 1/4 மூடி (துருவி வைத்து கொள்ளவும்)
சின்ன வெங்காயம் - 15 (துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்)
வரமிளகாய் - 3 
கடுகு - 2 டீஸ்பூன்
கடலெண்ணெய் - 4 டீஸ்பூன் 
பெருஞ்சீரக பொடி - 1 1/2 டீஸ்பூன் 
உப்பு -  1 1/2  டீஸ்பூன்

செய்முறை:
முதலில் பலாமூசை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக அரிந்து வைத்து கொள்ளவும். நறுக்கிய பலாமூஸ் துண்டுகளை குக்கரில் வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி நான்கு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். 

வேக வைத்த பலாமூஸ் துண்டுகளை சிப்ஸ் கட்டையில் வைத்து சிறு துணுக்குகளாக சீவி கொள்ளவும். 

சிறு துணுக்குகளாக சீவிய பலாமூஸில் 1 1/2 டீஸ்பூன் உப்பையும், 1 1/2  டீஸ்பூன் பெருஞ்சீரக பொடியையும் தூவி விட்டு நன்கு பிசறி விடவும்.

துவரம்பருப்பை வேக வைத்து அதில் தேங்காய் துருவலை தூவி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் கடலெண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, வரமிளகாய், நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காய 

துண்டுகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும், நன்கு வதங்கியவுடன் அதில் உப்பு, பெருஞ்சீரகபொடி சேர்த்து பிசறி வைத்துள்ள பலாமூஸ் துணுக்குகளை சேர்த்து  வதக்கவும்.  

வதக்கி முடிக்கும்போது வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவலை சேர்க்கவும்.  

நன்கு வதங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும், சுவையான பலாமூஸ் பொடிமாஸ் தயார்.   
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday, 10 April 2018

வெண்டைக்காய் பொரியல் சமையல் குறிப்பு

 மகளிர் டைம்ஸ்
வெண்டைக்காய் பொரியல் சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். ----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday, 3 April 2018

உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் எலுமிச்சம்பழ சாதம்


லுமிச்சம்பழ சாதம் சமையல் குறிப்பு - காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்.


தேவையான பொருட்கள்
எலுமிச்சம்பழம் - 3 
கடலைபருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் - 3 
கடுகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை  - 1 ஈர்க்கு 
வெந்தய பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காய பொடி - 1/4 டீஸ்பூன் 
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை
முதலில் எலுமிச்சம்பழங்களை இரண்டு துண்டுகளாக வெட்டி சாறு பிழிந்து ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைத்து கொள்ளவும். (விதைகளை வடிகட்டி விடவும்)

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு, மிளகாய், கடலைபருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும், 

தாளித்த கடுகு, மிளகாய், கடலைபருப்பு, கறிவேப்பிலையுடன் எலுமிச்சை சாறு, வெந்தயபொடி, பெருங்காய பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்தவுடன் எலுமிச்சம்பழ சாறு கெட்டியான பதத்துக்கு வந்துவிடும், அப்போது அடுப்பிலிருந்து எலுமிச்சம்பழ காய்ச்சலை இறக்கி விடவும்.

ஒரு அகலமான தட்டு அல்லது தாம்பாளத்தில் சாதத்தை கொட்டி அதில் எலுமிச்சம்பழ காய்ச்சலை ஊற்றி நன்கு கிளறி விடவும். 

சுவையான எலுமிச்சம்பழ சாதம் தயார். 

----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday, 28 March 2018

தேங்காய் சட்னி - சமையல் குறிப்பு


தேங்காய் சட்னி - சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 


தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1 மூடி 
பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன் 
வர மிளகாய் - 2 
உப்பு - தேவையான அளவு 
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு 
பெருங்காய பொடி - 1/2 டீஸ்பூன் 

செய்முறை:

முதலில் மிளகாயுடன் பொட்டுகடலை, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். 

மிளகாய், பொட்டுகடலை, உப்பு பொடியுடன் தேங்காய் துருவலை சேர்த்து மிக்சியில் அரைக்கவும். 

ஒரு முறை அரைத்தவுடன் அதில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து தேங்காய் சட்னியை தனியே ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.   

ஆலக்கரண்டியை அடுப்பில் வைத்து அதில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய்  காய்ந்தவுடன் 1 டீஸ்பூன் கடுகு போடவும், கடுகு வெடித்தவுடன் அதில் சிறிது பெருங்காயபொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

தாளித்த கடுகு, கறிவேப்பிலை , பெருங்காயபொடியை  தனியே எடுத்து வைத்துள்ள தேங்காய் சட்னியில் சேர்க்கவும். 

இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள அருமையான தேங்காய் சட்னி தயார். 
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday, 20 March 2018

வாய்வு தொல்லை போக்கும் பூண்டு சட்னி

                                

வாய்வு தொல்லை போக்கும் பூண்டு சட்னி - சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். தேவையான பொருட்கள்:
பூண்டு: 12 பற்கள் (உரித்து வைத்து கொள்ளவும்)
தேங்காய் துருவல் - 1 மூடி 
வரமிளகாய் - 2 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் மிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும், 

பின்னர் அதனுடன்  தேங்காய் துருவல் சேர்த்து ( 1/4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்) அரைத்து கொள்ளவும்.

இறுதியில் மிளகாய், தேங்காய் துருவலுடன் பூண்டு பற்களை சேர்த்து அரைக்கவும் -  பூண்டு சட்னி ரெடி.

----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------