Tuesday 23 January 2018

தக்காளி குருமா - சமையல் குறிப்பு



தேவையான பொருட்கள்:
தக்காளி – 2                                                               
கசகசா – 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – நூறு கிராம்       
பச்சை மிளகாய் – 3
 பட்டை – 4 துண்டு                     
கிராம்பு – 5 துண்டு
தேங்காய் – ½ மூடி தேங்காய் துருவல்   
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
பொட்டுகடலை – 4 டீஸ்பூன்             
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
கடலை எண்ணெய் – 100 கிராம்         
பூண்டு – நான்கு பல்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை 
உப்பு – தேவையான அளவு



செய்முறை: 

முதலில் தக்காளி, வெங்காயத்தை சிறு துண்டுகளாக அரிந்து வைத்து 
கொள்ளவும். 

கசகசா, பெருஞ்சீரகம், பொட்டுகடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். பின்னர் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

வாணலியில்  நான்கு    டீஸ்பூன்    கடலை    எண்ணெய்    விட்டு சூடானவுடன் பட்டை     கிராம்பு    போட்டு    வதக்கவும், நன்கு     வதங்கியவுடன்     அரிந்து வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, மிளகாயை சேர்த்து வதக்கவும்.

பட்டை, கிராம்பு, வெங்காயம், பூண்டு, மிளகாய் நன்கு வதங்கியவுடன் அதனுடன் தக்காளியை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி வெங்காயம் பூண்டு வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய், கசகசா மசாலாவை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.

சுவையான தக்காளி குருமா தயார்.
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------