Tuesday 24 September 2019

வளரும் தொழில்முனைவோர் - Paddu Corner - திருமதி ஸ்டெல்லா மேரி


பெங்களூரிலுள்ள, மார்த்தஹல்லி பகுதியில் மாலை நேரங்களில் சுடச்சுட பணியாரம் சுட்டு தருகிறார்கள் பட்டூ கார்னர் நடத்தி வரும் திருமதி ஸ்டெல்லா மேரி, பிளேசியஸ்  தம்பதியினர், மாலை ஐந்து மணிக்கு துவங்கும் பணியார விற்பனை இரவு பதினோரு மணி வரை நடக்கிறது, இந்த பகுதியில் வாழும் மக்கள் பலருக்கு மாலை நேரத்தில் பட்டூ கார்னரின் சூடான, சுவையான காரப் பணியாரம் மிக சிறந்த ஸ்நாக்ஸ் ஆக இருந்து வருகிறது, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வெங்காயம், காய்கறிகள் அல்லது முட்டை பணியாரம் என்று விதவிதமான சுவைகளில் பணியாரம் செய்து தருகின்றனர்.

பட்டூ கார்னரை நடத்தி வரும் திருமதி ஸ்டெல்லா மேரி அவர்கள் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார், அப்போது எதிர்பாராமல் நடந்த ஒரு சாலை விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மூன்று மாதங்கள் வரை வீட்டில் ஓய்வில் இருக்க நேர்ந்துள்ளது, அப்போது அவர் மனதில் இந்த பணியார விற்பனை செய்யும் திட்டம் உதித்துள்ளது, உடல்நலம் சற்று தேறிய பின்பு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு தன் மனதில் உதித்த பணியார கடை துவங்கும் திட்டத்தை செயல்படுத்தி இன்று ஒரு வளரும் தொழில் முனைவோராக திகழ்கிறார் திருமதி ஸ்டெல்லா மேரி.


தனது கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை என்று நன்றியுடன் அவர் குறிப்பிடுகிறார். வாழ்க்கையில் எதிர்பாராமல் சந்திக்கும் விபத்துகளால் சோர்ந்து போய் விடாமல் தொடர்ந்து போராடி ஒரு தொழில் முனைவோராக வெற்றி பெற்றுள்ள திருமதி ஸ்டெல்லா மேரி அவர்களின் பேட்டியுடன், அவர்களின் பட்டூ கார்னர் கடையின் அறிமுகமும், வாடிக்கையாளர் ஒருவரின் பேட்டியும்  இந்த வாரம் மகளிர் டைம்ஸில்  காணொளி காட்சியாக இடம்பெறுகிறது.

----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்