Tuesday 24 April 2018

பலாமூஸ் பொடிமாஸ் - சமையல் குறிப்பு


லாமூஸ் பொடிமாஸ் சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 


தேவையான பொருட்கள்:
பலாமூஸ்(பலாக்காய்) - 1/4 கிலோ 
துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் - 1/4 மூடி (துருவி வைத்து கொள்ளவும்)
சின்ன வெங்காயம் - 15 (துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்)
வரமிளகாய் - 3 
கடுகு - 2 டீஸ்பூன்
கடலெண்ணெய் - 4 டீஸ்பூன் 
பெருஞ்சீரக பொடி - 1 1/2 டீஸ்பூன் 
உப்பு -  1 1/2  டீஸ்பூன்

செய்முறை:
முதலில் பலாமூசை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக அரிந்து வைத்து கொள்ளவும். நறுக்கிய பலாமூஸ் துண்டுகளை குக்கரில் வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி நான்கு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். 

வேக வைத்த பலாமூஸ் துண்டுகளை சிப்ஸ் கட்டையில் வைத்து சிறு துணுக்குகளாக சீவி கொள்ளவும். 

சிறு துணுக்குகளாக சீவிய பலாமூஸில் 1 1/2 டீஸ்பூன் உப்பையும், 1 1/2  டீஸ்பூன் பெருஞ்சீரக பொடியையும் தூவி விட்டு நன்கு பிசறி விடவும்.

துவரம்பருப்பை வேக வைத்து அதில் தேங்காய் துருவலை தூவி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் கடலெண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, வரமிளகாய், நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காய 

துண்டுகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும், நன்கு வதங்கியவுடன் அதில் உப்பு, பெருஞ்சீரகபொடி சேர்த்து பிசறி வைத்துள்ள பலாமூஸ் துணுக்குகளை சேர்த்து  வதக்கவும்.  

வதக்கி முடிக்கும்போது வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவலை சேர்க்கவும்.  

நன்கு வதங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும், சுவையான பலாமூஸ் பொடிமாஸ் தயார்.   
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்