Saturday 18 July 2020

கடலைபருப்பு வெங்காய கறி - மகளிர் டைம்ஸ்


தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு: 50  கிராம்

சின்ன வெங்காயம் - 100  கிராம்

கடலைஎண்ணை - 2 டீஸ்பூன் 

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்

பெருஞ்சீரக பொடி - 1/2 டீஸ்பூன் 

கொத்தமல்லி - சிறிதளவு 

அப்பளம் - 2 

மஞ்சள் தூள் 

மிளகாய் தூள் 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் கடலைப்பருப்பை குக்கரில் வேக வைத்து தனியாக (குழைந்து விடாமல்  - அரை வேக்காடாக) எடுத்து வைத்து கொள்ளவும். 

வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் கடலைஎண்ணை விடவும், கடலைஎண்ணை சூடானவுடன் 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரக பொடியை சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

சின்ன வெங்காயம் சற்று வதங்கியவுடன் எடுத்து வைத்துள்ள மிளகாய் பொடி, மஞ்சள் பொடி & உப்பை வதக்கிய சின்ன வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். வெங்காயம் மிதக்கும் அளவு சிறிது பருப்பு வேக வைத்த தண்ணீர்  விட்டு வெங்காயத்தை சில நிமிடங்கள் வேக விடவும். வெங்காயம் வெந்தவுடன் வேக வைத்த கடலைபருப்பு, தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விட்டு இறக்கி விடவும்.

இரண்டு அப்பளம் எண்ணையில் பொரித்து அதை சூடான வெங்காய கறியில் உடைத்து போட்டால் வெங்காய கறி அதிக சுவையாய் இருக்கும். சுவையான வெங்காய கறி தயார். 

இது சாதம், இட்லி, தோசை போன்ற உணவுகளுடன் தொட்டு கொள்ள சிறந்த சைட் டிஷ் ஆகும்.

----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்