தேவையான பொருட்கள்:
3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
3 ஸ்பூன் சோற்று கற்றாழை ஜெல்
1 இ வைட்டமின் காப்சூல்
செய்முறை:
ஒரே வாரத்தில் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளருவதற்கும் இந்த எண்ணெய் குளியல் உதவுகிறது. 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும், சோற்று கற்றாழை ஜெல் கடையில் வாங்கி கொள்ளலாம் அல்லது தோட்டத்தில் உள்ள சோற்று கற்றாழையை பறித்து நீங்களே சோற்று கற்றாழை ஜெல் தயாரித்து கொள்ளலாம். 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், 3 ஸ்பூன் சோற்று கற்றாழை ஜெல்லை நன்கு ஸ்பூனால் அடித்து கலக்கவும். இதனுடன் 1 இ வைட்டமின் காப்சூல் சேர்க்கவும். (இ வைட்டமின் கேப்சூல் மருந்து கடைகளில் பத்து கேப்சூல்கள் கொண்ட ஒரு பட்டை இருபது முதல் முப்பது ரூபாயில் கிடைக்கும்)
இந்த எண்ணெய் கலவையை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தேய்த்து விடவும். அரை மணி நேரம் கழித்து சீயக்காய் தூள் தேய்த்து குளிக்கவும். இந்த எண்ணெய் குளியலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்து வந்தால் ஒரே வாரத்தில் முடி கொட்டுவது நிற்பதுடன் கூந்தல் அடர்த்தியாகவும் வளர தொடங்கும்.