Monday 29 January 2018

உளுத்தம்பருப்பு சட்னி - சமையல் குறிப்பு




தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் 

தேங்காய் - அரை மூடி (துருவி வைத்து கொள்ளவும்)

வர மிளகாய் - 2 

நல்லெண்ணெய் - 1 டீ ஸ்பூன் 

புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு

உப்பு - தேவைக்கேற்ப 


செய்முறை:

முதலில் அடுப்பில் ஆலகரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானவுடன்,  இரண்டு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை பொன்முறுவலாக வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.



மிக்சியில் வர மிளகாய், வறுத்து வைத்த உளுத்தம்பருப்பு, புளி, உப்பு போட்டு அரைத்து கொள்ளவும், பின்னர் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து அரை நிமிடம் அரைக்கவும், சிறிது தண்ணீர்  விட்டு மீண்டும் ஒரு முறை அரைத்து எடுத்தால் இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையான உளுத்தம்பருப்பு சட்னி  தயார்.


----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Tuesday 23 January 2018

தக்காளி குருமா - சமையல் குறிப்பு



தேவையான பொருட்கள்:
தக்காளி – 2                                                               
கசகசா – 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – நூறு கிராம்       
பச்சை மிளகாய் – 3
 பட்டை – 4 துண்டு                     
கிராம்பு – 5 துண்டு
தேங்காய் – ½ மூடி தேங்காய் துருவல்   
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
பொட்டுகடலை – 4 டீஸ்பூன்             
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
கடலை எண்ணெய் – 100 கிராம்         
பூண்டு – நான்கு பல்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை 
உப்பு – தேவையான அளவு



செய்முறை: 

முதலில் தக்காளி, வெங்காயத்தை சிறு துண்டுகளாக அரிந்து வைத்து 
கொள்ளவும். 

கசகசா, பெருஞ்சீரகம், பொட்டுகடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். பின்னர் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

வாணலியில்  நான்கு    டீஸ்பூன்    கடலை    எண்ணெய்    விட்டு சூடானவுடன் பட்டை     கிராம்பு    போட்டு    வதக்கவும், நன்கு     வதங்கியவுடன்     அரிந்து வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, மிளகாயை சேர்த்து வதக்கவும்.

பட்டை, கிராம்பு, வெங்காயம், பூண்டு, மிளகாய் நன்கு வதங்கியவுடன் அதனுடன் தக்காளியை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி வெங்காயம் பூண்டு வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய், கசகசா மசாலாவை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.

சுவையான தக்காளி குருமா தயார்.
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Tuesday 16 January 2018

தக்காளி சட்னி - சமையல் குறிப்பு


தேவையான பொருட்கள்:

தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
வர மிளகாய் - 4
வெள்ளை உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
கல் உப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலை எண்ணெய் - 5 டீ ஸ்பூன்


செய்முறை:

தக்காளியை நன்கு கழுவி விட்டு சில நிமிடங்கள் வெண்ணீரில் போட்டு பின்னர் தோலுரித்து எடுத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும். 

வெள்ளை உளுத்தம்பருப்பை இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். 

வறுத்த உளுத்தம்பருப்புடன் வரமிளகாயையும், உப்பையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும் பின்பு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அரைத்து கொள்ளவும், கடைசியாக தக்காளியை சேர்த்து அரைத்து கொள்ளவும். 

வாணலியில் மூன்று டீஸ்பூன்  எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கொள்ளவும், இதில் மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி சட்னியை சேர்த்து சில வினாடிகள் சுட வைத்து எடுக்க சூடான, சுவையான தக்காளி சட்னி தயார். 
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Monday 8 January 2018

உருளைக்கிழங்கு பூரி மசாலா




தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2 (அல்லது)
சின்ன வெங்காயம் - 150 கிராம்
மிளகாய் - 4
கடலைபருப்பு - 2 டீ ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
கடலைஎண்ணெய் - 5 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரிசிமாவு - 2 டீ ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு



செய்முறை:

உருளைகிழங்கை நன்கு கழுவி நான்கு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், இஞ்சியை தோல் சீவி தட்டி எடுத்து கொள்ளவும், குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு உருளைகிழங்கையும், இஞ்சி துண்டையும் போட்டு மூடி நான்கு விசில் வரை வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும். 


வெங்காயத்தை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 

அடுப்பில் வாணலி வைத்து 5 டீ ஸ்பூன் கடலைஎண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, கடலைபருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு சிவக்க வறுக்கவும், பின்னர், நறுக்கி வைத்த வெங்காய துண்டுகளை போட்டு வதக்கவும்.

(கடுகு, கடலைபருப்பு, மிளகாய், வெங்காய துண்டுகள்) நன்கு வதங்கியவுடன் 1 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உப்பு, மஞ்சள் தூள், வேக வைத்த உருளைகிழங்கு துண்டுகளை மசித்து போட்டு தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும்.  (தண்ணீர் சேர்க்கும் போது சிறிது அரிசிமாவு சேர்த்தால் பூரி மசாலா கெட்டியாக வரும்)

பூரிக்கு தொட்டு கொள்ள சுவையான உருளைக்கிழங்கு  பூரி மசாலா தயார்.
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Tuesday 2 January 2018

டெஸ்ஸி தாமஸ் - இந்தியாவின் ஏவுகணை பெண்

க்னி புத்ரி (நெருப்பின் மகள்) என்றும் அழைக்கபடும் டெஸ்ஸி தாமஸ், இந்திய திருநாட்டில் ஏவுகணை திட்டத்தின் தலைமை பதவி வகிக்கும் முதல் பெண் ஆவார்...அவரை பற்றிய காணொளி காட்சி தொகுப்பு இந்த காணொளி காட்சி தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யு டியூப் சானல் லைக் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...

----------------------------------------------
முந்தைய பதிவுகள்
----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்