Wednesday 28 March 2018

தேங்காய் சட்னி - சமையல் குறிப்பு


தேங்காய் சட்னி - சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 


தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1 மூடி 
பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன் 
வர மிளகாய் - 2 
உப்பு - தேவையான அளவு 
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு 
பெருங்காய பொடி - 1/2 டீஸ்பூன் 

செய்முறை:

முதலில் மிளகாயுடன் பொட்டுகடலை, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். 

மிளகாய், பொட்டுகடலை, உப்பு பொடியுடன் தேங்காய் துருவலை சேர்த்து மிக்சியில் அரைக்கவும். 

ஒரு முறை அரைத்தவுடன் அதில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து தேங்காய் சட்னியை தனியே ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.   

ஆலக்கரண்டியை அடுப்பில் வைத்து அதில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய்  காய்ந்தவுடன் 1 டீஸ்பூன் கடுகு போடவும், கடுகு வெடித்தவுடன் அதில் சிறிது பெருங்காயபொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

தாளித்த கடுகு, கறிவேப்பிலை , பெருங்காயபொடியை  தனியே எடுத்து வைத்துள்ள தேங்காய் சட்னியில் சேர்க்கவும். 

இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள அருமையான தேங்காய் சட்னி தயார். 
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்