Tuesday 6 March 2018

வாய்புண் வயிற்றுப்புண் ஆற்றும் மணத்தக்காளி கீரை சூப்


வாய்புண் வயிற்றுப்புண் ஆற்றும் மணத்தக்காளி கீரை சூப் சமையல் குறிப்பு காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மகளிர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 



தேவையான பொருட்கள்: 
மணத்தக்காளி கீரை (அரிந்தது)- 1 கப் 
தக்காளி - 2 
வரமிளகாய் - 2
தேங்காய்  - 1/2 மூடி தேங்காய் துருவல்
கடலை எண்ணெய் - 3 டீஸ்பூன் 
வெந்தய பொடி - 1 டீஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 15  
கசகசா - 1 டீ ஸ்பூன் 
மிளகு - 1 டீ ஸ்பூன் 
சீரகம் - 1 டீ ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:
கீரையை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பின் ஆய்ந்து வைத்து கொள்ளவும். (1 கப் அளவு)


சின்ன வெங்காயம், தக்காளி இவற்றை துண்டுகளாக அரிந்து வைத்து கொள்ளவும்.


கசகசா, மிளகு, சீரகம் இவற்றுடன் தேங்காய் துருவலை சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று அரைத்துகொள்ளவும்,  பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி,  எண்ணெய் நன்கு காய்ந்தவுடன்  வெந்தயபொடியை சேர்த்து சிவந்தவுடன், வரமிளகாய், அரிந்து வைத்த  சின்ன வெங்காயம் இவற்றை சேர்த்து சிவக்க வதக்கவும். 


சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அரிந்து வைத்த தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்கவும். 


தக்காளி நன்கு வதங்கியவுடன் ஆய்ந்து வைத்துள்ள மணத்தக்காளி கீரையை சேரத்து வதக்கவும். 

கீரை நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள கசகசா, மிளகு, சீரகம், தேங்காய் துருவல் மசாலாவை 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொத்தி வந்தவுடன் இறக்கவும். 
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------