தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2 (அல்லது)
சின்ன வெங்காயம் - 150 கிராம்
மிளகாய் - 4
கடலைபருப்பு - 2 டீ ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
கடலைஎண்ணெய் - 5 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரிசிமாவு - 2 டீ ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
செய்முறை:
உருளைகிழங்கை நன்கு கழுவி நான்கு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், இஞ்சியை தோல் சீவி தட்டி எடுத்து கொள்ளவும், குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு உருளைகிழங்கையும், இஞ்சி துண்டையும் போட்டு மூடி நான்கு விசில் வரை வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
வெங்காயத்தை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து 5 டீ ஸ்பூன் கடலைஎண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, கடலைபருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு சிவக்க வறுக்கவும், பின்னர், நறுக்கி வைத்த வெங்காய துண்டுகளை போட்டு வதக்கவும்.
(கடுகு, கடலைபருப்பு, மிளகாய், வெங்காய துண்டுகள்) நன்கு வதங்கியவுடன் 1 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உப்பு, மஞ்சள் தூள், வேக வைத்த உருளைகிழங்கு துண்டுகளை மசித்து போட்டு தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும். (தண்ணீர் சேர்க்கும் போது சிறிது அரிசிமாவு சேர்த்தால் பூரி மசாலா கெட்டியாக வரும்)
பூரிக்கு தொட்டு கொள்ள சுவையான உருளைக்கிழங்கு பூரி மசாலா தயார்.
முந்தைய பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
- தமிழர் டைம்ஸ்
- மாணவர் டைம்ஸ்
- மகளிர் டைம்ஸ்
- இளைஞர் டைம்ஸ்
- டைம்ஸ் உலகம்
- ஹெல்த் டைம்ஸ்
- டெக் டைம்ஸ்
- சினிமா டைம்ஸ்
- வணிகர் டைம்ஸ்
- சுற்றுலா டைம்ஸ்
- நகைச்சுவை டைம்ஸ்
- டிரெண்ட்ஸ் டைம்ஸ்
- கோல்டன் டைம்ஸ்
- கிரைம் டைம்ஸ்
- உங்கள் டைம்ஸ்
- லோக்கல் டைம்ஸ்
- தொடர்புக்கு
-------------------------------------------------------