Tuesday, 16 January 2018

தக்காளி சட்னி - சமையல் குறிப்பு


தேவையான பொருட்கள்:

தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
வர மிளகாய் - 4
வெள்ளை உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
கல் உப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலை எண்ணெய் - 5 டீ ஸ்பூன்


செய்முறை:

தக்காளியை நன்கு கழுவி விட்டு சில நிமிடங்கள் வெண்ணீரில் போட்டு பின்னர் தோலுரித்து எடுத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும். 

வெள்ளை உளுத்தம்பருப்பை இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். 

வறுத்த உளுத்தம்பருப்புடன் வரமிளகாயையும், உப்பையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும் பின்பு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அரைத்து கொள்ளவும், கடைசியாக தக்காளியை சேர்த்து அரைத்து கொள்ளவும். 

வாணலியில் மூன்று டீஸ்பூன்  எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கொள்ளவும், இதில் மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி சட்னியை சேர்த்து சில வினாடிகள் சுட வைத்து எடுக்க சூடான, சுவையான தக்காளி சட்னி தயார். 
----------------------------------------------
முந்தைய பதிவுகள்
---------------------------------------------- -------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------